நெல்லையில் பதற்றம்: அண்ணாமலை சொன்ன வார்த்தை - கொளுத்திய காங்கிரஸ் கட்சியினர்!
Nellai BJP vs Congress Annamalai vs Selvaperunthagai
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும், காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகைக்கும் இடையேயான வார்த்தை போர் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அண்மையில் செய்தியாளர்களில் சந்திப்பில் அண்ணாமலை, செல்வப் பெருந்தகையை ரவுடி என்றும், அவர் குற்ற வழக்குகளில் சம்பந்தபட்டு உள்ளார் என்றும் விமர்சித்து இருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக செய்தியாளர் சந்திப்பை நடத்திய செல்வப் பெருந்தகை, அண்ணாமலை என்ன ஐபிஎஸ் படித்தார் என்று தெரியவில்லை. அவர் கட்சியில் இவ்வளவு பேர் ரவுடிகள் உள்ளார்கள் என்று என்று ஒரு பட்டியலை வெளியிட்டு இருந்தார்.
மேலும் தனது பெயரில் தமிழகத்தில் ஒரு காவல் நிலையத்தில் ஏதெனும் ஒரு வழக்கு உள்ளதா? எப்படி அவர் என்னை ரவுடி என்று சொல்லலாம்? இதனை நிரூபிக்க தயாரா என்றும் அண்ணாமலைக்கு சவால் விட்டு இருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த அண்ணாமலை, செல்வப் பெருந்தகை மீது உள்ள வழக்குகளை பட்டியலிட்டு ஒரு டிவிட் ஒன்றை போட்டு இருந்தார். அதில் செல்வபெருந்தகை மீதான கொலை, கொலை மிரட்டல், குண்டர் சட்டத்தில் செல்வப்பெருந்தகை கைது செய்யப்பட்டது எல்லாம் இடம் பெற்று இருந்தது.
இந்நிலையில், திருநெல்வேலி காங்கிரஸ் கட்சியினர், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.
செல்வப் பெருந்தகை குறித்து அண்ணாமலை விமர்சித்த கருத்தை கண்டித்து திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், அண்ணாமலைக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர் 100க்கும் மேற்பட்டோர், அண்ணாமலையின் உருவ பொம்மைக்கு தீ வைத்துக் கொளுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த உருவ பொம்மையை பறித்து தீயை அணைத்தனர். இதனால் அந்த சம்பவ அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
English Summary
Nellai BJP vs Congress Annamalai vs Selvaperunthagai