திருமணம் செய்துகொள்ள வற்புறுத்திய காதலியை தாக்கிய காதலன் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருவம் எழில்நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரமன். இவரது மகள் சரண்யா. இவர் எம்.பி.ஏ., முடித்துவிட்டு சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது, இவருக்கு திருச்சி வாசன் நகர் 11-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் கிஷோர்  என்பவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. 

இந்நிலையில் கிஷோரும் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது இருவருக்குமான பழக்கம் சற்று நெருக்கமானது. நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியது.

அதன் பின்னர் மூன்று ஆண்டுகளாக இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். ஆனால், சமீப நாட்களாக கிஷோர் சரண்யாவை நேரில் சந்திப்பதை தவிர்த்தது மட்டுமல்லாது அவருடைய செல்போன் அழைப்பையும் தவிர்த்துள்ளார்.

இதைத் தொடர்ந்து சரண்யா கிஷோரை சந்திப்பதற்காக திருச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று, கிஷோரிடம் தகராறு செய்தார். அப்போது கிஷோர் மற்றும் அவரது தந்தை கண்ணன் உள்ளிட்டோர் சரண்யாவை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதுகுறித்து, சரண்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

மேற்கொண்டு அவர்களிடம் விசாரணை செய்த போது பல தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையில், கிஷோருடன் சரண்யா காதல் வயப்பட்டதை அறிந்து அவரது பெற்றோர்கள் சரண்யாவை அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணம் ஆன ஒரே வாரத்தில் அவர் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

அதன் பின்னர் மீண்டும் கிஷோரை தொடர்புக் கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் அதற்கு கிஷோர் ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி சரண்யா கிஷோரை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கு கிஷோர் மறுத்ததால் சரண்யா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near trichy boy friend arrested for attack girlfriend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->