கோவை : மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவர்.!
near coimbatore college student died in room
கோயம்புத்தூரில் உள்ள கணபதி சுபாஸ் நகரை சேர்ந்த மோகன் மகன் அர்ஜூன். கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வரும் இவர், கல்லூரி செல்வதற்கு வசதியாக பீளமேடு காந்திமாநகரில் அறை எடுத்து தங்கினார்.
இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக உடல் நலம் சரியில்லாததால் அர்ஜூன் கல்லூரிக்கு செல்லாமல் அறையிலேயே இருந்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் அர்ஜுனின் தாய் விஜயலட்சுமி தனது மகனிடம் செல்போனில் பேசினார்.

சிறிது நேரத்திற்கு பின்னர் விஜயலட்சுமி மீண்டும் தொடர்பு கொண்ட போது அர்ஜுன் போனை எடுக்கவில்லை. இதனால் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே புறப்பட்டுச் சென்ற அவர் தனது மகன் தங்கியிருக்கும் அறைக்கு சென்று கதவை தட்டினார். ஆனால் அறையின் கதவு திறக்கப்படவில்லை.
இதனால், பதற்றமடைந்த அவர் அருகிலிருந்தவர்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, அர்ஜூன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவனின் உடலை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து, கல்லூரி மாணவர் உடல் நல பாதிப்பால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
near coimbatore college student died in room