"என் வாழ்க்கையே வீணாய் போனது ரம்மியால்"... மனைவிக்கு அனுப்பிய வீடியோ.... விபரீத சம்பவம்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி விளையாட்டால் கடலூர் மாவட்டத்தைச் சார்ந்த கூலி தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை மீட்ட உறவினர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள  மேலிருப்பு கிராமத்தைச் சார்ந்தவர்  தமிழ் குமார் கூலி தொழிலாளியான இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு அடிமையானவர் என தெரிகிறது. இந்த  விளையாட்டின் மூலம் பல லட்சம் ரூபாயை இவர் இழந்திருக்கிறார். இதன் காரணமாக ஏற்பட்ட  மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று இருக்கிறார். மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது மனைவிக்கு வீடியோ ஒன்றையும் அனுப்பியுள்ளார்.

அந்த வீடியோவில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தனது வாழ்க்கையை மிகவும் நாசமாக்கி விட்டது எனவும்  தன் பல லட்ச ரூபாயை இந்த விளையாட்டின் மூலமாக இழந்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் தனது மனைவியை மிகவும் கஷ்டப்படுத்தி விட்டதாகவும் அதற்கு மன்னிப்பும் கூறியிருக்கிறார். தனது குடும்பம் நடுத்தெருவில் நிற்க நானும் ரம்மி விளையாட்டும் தான் காரணம் என தெரிவித்து அந்த நபர் அரசியல் கட்சிகள்  மற்றும் தலைவர்கள் ரம்மி விளையாட்டுக்கு எதிராக போராட வேண்டும் எனக் கூறியுள்ளார். நான் உன்னை விட்டு போகிறேன் என்னை மன்னித்துவிடு எனவும் குறிப்பிட்டுள்ளார். குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள்ளுமாறும் மனைவியிடம் தெரிவித்திருக்கிறார் அந்த நபர்.

இதனைத் தொடர்ந்து அந்த நபர் விஷம் அருந்திய தகவல் தெரிந்ததும் அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரம்மி விளையாட்டால் தற்கொலைக்கு முயன்ற நபர்  தற்கொலை செய்வதற்கு முன் தனது மனைவிக்கு அனுப்பிய வீடியோ  அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My life was wasted because of this game, a terrible decision by the person who sent the video to his wife


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமா?
Seithipunal
--> -->