அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மு.க.ஸ்டாலின்!
MK Stalin Joe Biden
டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நேற்று ஜி-20 உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேலும், பிற நாடுகளின் தலைவர்களும் பங்கேற்று உள்ளனர். மேலும் நேற்று, மாநாட்டையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, வெளிநாட்டு தலைவர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
இந்த விருந்தில் பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர்.
விருந்தின்போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து கைலுக்கினார்.
இதுதொடர்பான் புகைப்படத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் அருகில் இருந்தனர்.