அரியலூரில் அதிர்ச்சி.! காணாமல் போன விவசாயி.. முந்திரி காட்டில் சடலமாக மீட்பு.!
Missing farmer found dead body in Cashew forest in Ariyalur
அரியலூர் மாவட்டத்தில் காணாமல் போன விவசாயி முந்திரி காட்டில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம் சாத்தம்பாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி செம்மலை (29). இவரது மனைவி நித்யா. இந்நிலையில் செம்மலை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வயலுக்கு சென்று விட்டு வருவதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகு நேரமாகியும் செம்மலை வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்துள்ளனர்.
ஆனால் எங்கு தேடியும் செம்மலை கிடைக்காததால் இது குறித்து விக்கிரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் போலீசார், செம்மலையை தேடி வந்தனர். இந்நிலையில் விக்கிரமங்கலம் அருகே உள்ள முந்திரி காட்டுப்பகுதியில் உள்ள மரக்கிளையில் ஆண் ஒருவர் தூக்கில் பிணமாக தூங்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தூக்கில் தொங்கியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தூக்கில் துவங்கியவர் காணாமல் போன செம்மலை என்பது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், செம்மலையை யாராவது அடித்து தூக்கில் தொங்க விட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உண்டா? என்று பல்வேறு கோணங்களில் தீவிரமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Missing farmer found dead body in Cashew forest in Ariyalur