மதிமுக அமைப்பு தேர்தல் | வைகோ மற்றும் அவரின் மகன் துரை வைகோ போட்டியின்றி மீண்டும் தேர்வு!
MDMK Vaiko DuraiVaiko
மதிமுக ஐந்தாவது அமைப்பு தேர்தலில் வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்து உள்ளது. இதில், அக்கட்சியின் பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வாகியுள்ளார்.
வைகோவை தவிர வேறு யாருமே அப்பதவிக்கு மனு தாக்கல் செய்யாததால், அவர் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதன்மைச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட வைகோவின் மகன் துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேலும், மதிமுகவின் அவைத் தலைவராக ஆடிட்டர் அர்ஜுனராஜ், பொருளாளராக செந்திலதிபன் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக மல்லை சி ஏ சத்யா, ஆகு மணி, ஆடுதுறை முருகன், ராஜேந்திரன், ரோஹையா சேக் முகமது ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுகவின் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்களாக டாக்டர் சி கிருஷ்ணன், ராணி செல்வின், கே ஏ எம் நிஜாம், கழக குமார், ஜெய்சங்கர், மதுரை சுப்பையா, பூவை பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.