மாமல்லபுரம் அஸ்வினி கைது! கத்தியை வைத்து சம்பவம்!
Maamallapuram ashwini Arrested
சமூக வளைதலங்களில் பிரபலமான நரிக்குறவர் இன பெண் அஸ்வினி சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2021ம் ஆண்டு பூஞ்சேரி பகுதியில் உள்ள கோயிலில் அன்னதானம் சாப்பிட சென்ற அஸ்வினியை சிலர் விரட்டியதாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.
இந்த வீடியோ வைரலாகவே, தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. மேலும், அவரின் வீட்டுக்கே சென்ற முதல்வர் ஸ்டாலின், அவருக்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்திருந்தார்.
இதனால் பிரபலமடைந்த அஸ்வினி வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்களின் பெயர்களை கூறி மற்ற வியாபாரிகளை மிரட்டுவதாகவும் புகார்கள் எழுந்தது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் கடை நடத்தி வந்த சக பழங்குடியினத்தவரை கத்தியால் கீரியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீசார் அஸ்வினியை கைது செய்துள்ளார்.
அஷ்வினி மீது கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Maamallapuram ashwini Arrested