தொட்டாலே இடியும் சுவர்.!! கையோடு வரும் என்.எல்.சி பாலத்தின் கட்டுமானம்.!! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி நிறுவனம் தனது இரண்டாவது நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வளையமாதேவி, கரிவெட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை உள்ளடக்கிய 25,000 மேற்பட்ட ஆக்டர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேத்தியாதோப்பு வழியாக செல்லும் பரவனாற்றை மடை மாற்றும் வகையில் கட்டுமானங்களை மேற்கொண்டு வருகின்றது. 

அந்த வகையில்சேத்தியாத்தோப்பு அருகே பரவனாற்றின் குறுக்கே என்எல்சியால் கட்டப்பட்டு வரும் பாலம் தரமற்று இருப்பதாக அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கத்தாழை கிராமத்தில் பரவனாற்றில் புதிய பாலம் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. என்எல்சி நிறுவனத்தால் கட்டப்பட்டு வரும் பாலத்தின்பக்கவாட்டுச் சுவர் தொட்டவுடன் இடிந்து விழுந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் கட்டுமானம் தரமற்று இருப்பதாக பணியை தடுத்து நிறுத்தினர்.

பாலத்தின் பக்கவாட்டுச்சுவர் தொட்டாலே இடிந்து விழுவதாக பொதுமக்கள் கேள்வி எழுப்பி அதிகாரிகளுடன் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பொது மக்களின் குற்றச்சாட்டை அடுத்து பாலத்தின் பக்கவாட்டுச் சுவர் முழுவதுமாக இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தரமற்ற முறையில் பாலம் கட்டப்படுவதை கடலூர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுமக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Low quality bridge constructed by NLC in cuddalore


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->