கோவையில் 13 வீடுகளில் கைவரிசை காட்டிய உ.பி. கொள்ளையர்கள் 3 பேர் சுட்டுப்பிடிப்பு!
kovai robbery case police gun fire
கோவை - மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் 13 வீடுகளில் கொள்ளையடித்த வடமாநிலக் கொள்ளையர்கள் 3 பேரை, காவல் துறையினர் சுட்டுப்பிடித்துள்ளனர்.
துணிகரக் கொள்ளை
கவுண்டம்பாளையம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் உள்ள 14 மாடிக் கட்டிடங்களில், பெரும்பாலானோர் அரசு ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.
சம்பவம்: நேற்று (நவ. 28) மர்ம நபர்கள் பூட்டியிருந்த 13 வீடுகளில் ஒரே நேரத்தில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றினர். இதில், மொத்தம் 56 பவுன் நகைகள், ரூ.3 லட்சம் ரொக்கப் பணம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.
காவல் துறையின் அதிரடி நடவடிக்கை
இதுகுறித்து உடனடியாகக் கவுண்டம்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களை வரவழைத்து விசாரித்தனர்.
தனிப்படை: கொள்ளையர்களைப் பிடிக்க மூன்று ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
கொள்ளைச் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே, கோவை குனியமுத்தூர் அடுத்த குளத்துப்பாளையத்தில் பதுங்கியிருந்த 3 பேரைத் தனிப்படையினர் சுட்டுப்பிடித்தனர்.
பிடிபட்டவர்கள் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் தெரியவந்துள்ளது. காயம் அடைந்த 3 பேரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
English Summary
kovai robbery case police gun fire