கோவை : பெண் ஊழியரை தாக்கிய கும்பல்.! வெளியான அதிர்ச்சி காரணம்.! இருவரை கைது செய்து போலீசார் அதிரடி.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டம், சரவணம்பட்டி காவல் நிலையத்தின் எல்லைக்குட்பட்ட, உடையாம்பாளையம் பகுதியில் கற்பகம் நூற்பாலை (ஸ்பின்னிங் மில்) இயங்கிவருகிறது. இந்த நூற்பாலை கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த நூற்பாலையில் 600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், இங்கு பணிபுரியும் பெண்களுக்கும், ஆண்களுக்கும் தனித்தனியாக விடுதிகள் நிறுவனத்தால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த இருபத்தி ஏழாம் தேதி ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளி ஒருவரை, இந்த நிறுவனத்தில் பணிபுரிய கூடிய முத்தையா என்ற தொழிலாளியும், பெண்களும் சேர்ந்து தாக்குகின்ற காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்த விடுதியின் பெண்கள் விடுதி வார்டன் லதா, மேலாளர் முத்தையா ஆகியோர் இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணை தாக்கியது போலீசாரின் விசாரணையில் உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து, இவர்கள் 2 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் மேலும் தெரியவருவதாவது, 'கடந்த ஒரு வாரமாக அந்த ஜார்க்கண்ட் பெண் பணிக்கு வரவில்லை என்று தெரிகிறது. இதனால் அவரை முத்தையா மற்றும் லதா வேலைக்கு அழைக்க அறைக்கு சென்றபோது, இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.

தற்போது தாக்குதல் காரணமாக அந்த ஜார்க்கண்ட் பெண் சொந்த ஊருக்குத் திரும்பி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KOVAI LADY STAFF ATTACK ISSUE


கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசை ப.சிதம்பரம் விமர்ச்சிப்பதை தடுக்கவே இந்த சிபிஐ ரெய்டு - செல்வப்பெருந்தகையின் இந்த குற்றச்சாட்டு?
Seithipunal