அடோப் நிறுவனத்தில் 18 ஆண்டு பயணம் நிறைவு...! - CEO பதவியை விடும் சாந்தனு நாராயண்...!
18 Year Journey at Adobe Comes End Shantanu Narayen Steps Down CEO
அமெரிக்கா நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஜோஸை தலைமையிடமாகக் கொண்டு உலகளவில் மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் அடோப் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தை பல ஆண்டுகளாக திறமையாக வழிநடத்தி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தனு நாராயண், தலைமை செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளார்.

இந்த முக்கிய அறிவிப்பை அடோப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புதிய தலைமை செயல் அதிகாரி தேர்வு செய்யப்படும் வரை சாந்தனு நாராயண் தனது பொறுப்புகளை தொடர்ந்து மேற்கொள்வார்.
அதன் பின்னர் அவர் நிறுவனத்தின் வாரியத் தலைவராக (Chairman) பதவி ஏற்று பணியாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, அடோப் நிறுவனத்தின் வளர்ச்சிப் பயணத்தில் முக்கிய பங்கு வகித்த சாந்தனு நாராயண் சுமார் 18 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தில் பணியாற்றி பல்வேறு மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் உருவாக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
18 Year Journey at Adobe Comes End Shantanu Narayen Steps Down CEO