துரைமுருகனுக்கு என்ன ஆனது, கதிர் ஆனந்தை பதறவைத்த இணைய செய்தி! திடீர் விளக்கம்!  - Seithipunal
Seithipunal


திமுக பொருளாளர் துரைமுருகன் நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
திமுக பொருளாளர் துரைமுருகன் கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதன் பிறகு மீண்டும் கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். 

அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக துரைமுருகன் சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் துரைமுருகன் உடல்நிலை குறித்து இணையத்தில் பலவாறான செய்திகள் பரவியது. இதனையடுத்து துரைமுருகன் உடல்நிலை குறித்து அவருடைய மகனும், வேலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கதிர் ஆனந்த் விளக்கமளித்துள்ளார்.

அவருடைய பதிவானது, "அனைவருக்கும் வணக்கம். வலைதளங்களில் என் தந்தை திரு துரை முருகன் அவர்கள் மிகவும் உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்று செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கிறது.

அவர் பூரண நலத்தோடு வழக்கமாக நடைபெறக்கூடிய மருத்துவ பரிசோதனைக்காக சென்றிருக்கிறார் என்பதை உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். பரிசோதனைகள் எல்லாம் நிறைவு பெற்றவுடன் இன்று இரவு அல்லது நாளை காலை வீடு திரும்புவார் என்று உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்." என கதிர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kathir anandh MP Explain about his father health condition


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->