கள்ளக்குறிச்சி | ''நான் முதல்வர்'' - மாணவர்கள் மத்தியில் உதயநிதி ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரிஷி வந்தியம் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வசந்தன் கார்த்திகேயன். இவர் ரிஷிவந்தியம் தொகுதியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று எம்.எல்.ஏ வாக இருக்கிறார். 

இந்த தொகுதி வாணாபுரம் பகுதி மக்கள் தாலுகா அலுவலகத்திற்கு சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சங்கராபுரம் தாலுகா அலுவலகத்திற்கு சென்று வருவதாக இருந்தது.

இதனால் வர்ணாபுரத்தில் புதிய தாலுக்கா அலுவலகம் ஒன்றை தற்போது எம்.எல்.ஏ வசந்தன் கார்த்திகேயன் முயற்சியால் கட்டி உள்ளார். இதன் திறப்பு விழாவிற்கு உதயநிதி ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதிக்கு வருகை புரிந்தார். 

அவருக்கு எம்.எல்.ஏ வசந்தன் கார்த்திகேயன் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தாலுகா அலுவலகம் திறப்பு விழா விமர்சியாக நடைபெற்றது. அடுத்து மாட்டூர் பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கட்சி முன்னோடிகளுக்கு பத்தாயிரம் மதிப்பிலான பொற்கிழிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 

அதை அடுத்து கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பள்ளி வளாகத்தில் ''நான் முதல்வர்'' என்ற திட்டம் குறித்து கலந்துரையாடிய போது அவர் தெரிவிக்கையில், கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும் கல்லூரியின் முதல் மாணவராக திகழ வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த திட்டத்தினால் இதுவரை 14 லட்சம் மாணவ- மாணவிகள் பயன் பெற்று, கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மொத்தம் 1425 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். 

இந்த திட்டத்தின் கீழ் ஒரு கல்லூரிக்கு 70 லட்சம் என்ற அடிப்படையில் மொத்தமாக 21 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவ, மாணவிகள் தங்களது படிப்பில் திறமைகளை வளர்த்து பயன்பெற வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

அதனை அடுத்து உதயநிதி ஸ்டாலின், உலகம் காத்தான் பகுதியில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் கட்சித் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சி சிறப்பித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kallakurichi I am Chief Minister Udayanidhi Stalin among students


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->