கள்ளக்குறிச்சி | அ.தி.மு.க. செயலாளர் மீது 5 பிரிவுகளில் வழக்கு! நள்ளிரவில் போராட்டம் நடத்திய தி.மு.க.வினர்!  - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சியில் நேற்று மாவட்ட செயலாளர் குமரகுரு தலைமையில் அ.தி.மு.க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவர் குறித்தும் மாவட்ட செயலாளர் தரக்குறைவாக பேசி இருக்கிறார். 

இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்குறிச்சி தி.மு.கவினர் இதனை கண்டித்து கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட 10 காவல் நிலையங்களில் குமரகுருவை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்துள்ளனர்.

ஒன்றிய குழு தலைவர் தலைமையில் சின்ன சேலத்தில் தி.மு.கவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் நள்ளிரவில் காவல் நிலையத்திற்கு சென்று புகார் மனு அளித்தனர். 

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுருவை கண்டித்தும், உடனடியாக அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோஷங்கள் எழுப்பினர். 

இந்நிலையில் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் குமரகுரு மீது கள்ளக்குறிச்சி போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kallakurichi ADMK secretary against Case DMK protested 


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->