திருவாரூரில், அஜாக்கிரதை மற்றும் அறியாமையால் துடிதுடிக்க பறிபோன உயிர்.. பெரியவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நன்னிலம் பகுதியை சார்ந்தவர் பக்கிரிசாமி (வயது 82). இவரது மனைவியின் பெயர் நவநீதம் (வயது 75). இவர்களின் மகன் ஸ்டாலின் (வயது 43). ஸ்டாலினிற்கு திருமணம் முடிந்து இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவர்களின் வீட்டின் வெளிப்புற திண்ணையில் பக்கிரிசாமி இரவில் உறங்குவதும், உள்புறத்தில் மனைவி, மகன் மற்றும் குழந்தைகள் ஆகிய குடும்பத்தினர் உறங்கிக்கொண்டு இருந்துள்ளனர். இந்த நிலையில், வீட்டின் வெளிப்புறத்தில் பழுதான பிரிட்ஜை வைத்துள்ளனர். 

பழுதடைந்த பிரிட்ஜில் துணிகளை வைத்த இருந்து வந்த நிலையில், வெளிப்புற திண்ணையில் படுத்திருந்த பக்கிரிசாமி, பிரிட்ஜின் மீது கொசுவர்த்தியை வைத்துள்ளனர். இந்த நிலையில், இன்று அதிகாலை நேரத்தில் பிரிட்ஜின் மீது வைக்கப்பட்டு இருந்த கொசுவர்த்தி துணிகளில் பட்டு கொழுந்துவிட்டு எறிந்துள்ளது.

இதனையடுத்து பிரிட்ஜில் இருந்த கேஸ் வெடித்து பக்கிரிசாமியின் மீது விழவே, பிரிட்ஜ் வெயிட்தா சத்தம் கேட்டு குடும்ப உறுப்பினர்கள் வெளியே வந்து பார்க்கையில் பக்கிரிசாமி தீயினால் சூழப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதனையடுத்து தீயணைப்பு படையினர் உதவியுடன் தீயை அணைத்த நிலையில், சம்பவ இடத்திலேயே பக்கிரிசாமி உடல் கருகி பலியாகியுள்ளார். இவரது உடலை மீட்டு அங்குள்ள திருவாரூர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Thiruvarur old man died bridge explosion


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal