பாலைவனத்தின் புத்துணர்வு பானம்… துர்க்மென் பாரம்பரிய ‘சால்’ (Chal)...!
refreshing drink desert Turkmen traditional Chal
Chal (சால்) என்பது துர்க்மெனிஸ்தான் நாட்டில் பாரம்பரியமாக அருந்தப்படும் புளிப்பான ஒட்டகப் பால் பானம். கடும் வெப்பம், வறண்ட பாலைவன சூழல் ஆகியவற்றில் உடலுக்கு குளிர்ச்சி தரும் இயற்கை பானமாக இது தலைமுறைகள் கடந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. துர்க்மென் மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், விருந்தோம்பலிலும் ‘சால்’ முக்கிய இடம் பெறுகிறது.
சால்
சால் என்பது ஒட்டகப் பாலை இயற்கையாக புளிக்கவைத்து தயாரிக்கப்படும் பானம். இதன் சுவை சற்றே புளிப்பாக இருக்கும். தயிரைப் போல தோற்றமளித்தாலும், அதைவிட மெல்லிய தன்மையுடனும், அதிக சத்துகளுடனும் இருக்கும். உடல் சோர்வை போக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் பானமாக துர்க்மென் மக்கள் நம்புகின்றனர்.
தேவையான பொருட்கள் (Ingredients)
ஒட்டகப் பால் – 1 லிட்டர்
பழைய சால் / தயிர் (Starter culture) – 2–3 டீஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை (விருப்பப்படி)
தண்ணீர் – தேவைக்கேற்ப (மிதமான பதத்திற்கு)

செய்முறை (Preparation Method)
பாலை தயாரித்தல்:
(Fresh) ஒட்டகப் பாலை எடுத்துக் கொள்ளவும். பால் சற்று சூடாக இருந்தால், அறை வெப்ப நிலைக்கு குளிரவிடவும்.
புளிப்பு தொடக்கம் (Starter சேர்த்தல்):
பாலை ஒரு மண் பானை அல்லது கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி, அதில் பழைய சால் அல்லது சிறிதளவு தயிரை சேர்த்து நன்றாக கலக்கவும்.
புளிக்க வைப்பது:
மூடி வைத்து, வெப்பமான இடத்தில் 12–24 மணி நேரம் புளிக்க விடவும். நேரம் அதிகமானால் புளிப்பு சுவை கூடும்.
பதம் சரிசெய்தல்:
புளித்த பிறகு தேவையெனில் சிறிது தண்ணீர் சேர்த்து, மிதமான பானமாக மாற்றலாம். உப்பு சேர்க்க விரும்பினால் இப்போது சேர்க்கலாம்.
பரிமாறுதல்:
நன்றாகக் கலக்கி குளிர்ச்சியாக பரிமாறவும்.
English Summary
refreshing drink desert Turkmen traditional Chal