நண்பர்களுடன் உற்சாகமாக குளிக்க சென்று, விளையாட்டு விபரீதத்தில் உயிரை விட்ட மாணவன்.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள புதுநகர் பகுதியை சார்ந்தவர் கணேஷ்குமார். இவரது மகனின் பெயர் நவீன்குமார் (வயது 12). இவர் இப்பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், கரோனா வைரஸின் பாதிப்பு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக்கு நவீன் தேனி மாவட்டத்தில் இருக்கும் சின்னமனூரில் உள்ள உறவினரின் இல்லத்திற்கு செல்லவே, அங்குள்ள ஆற்றுக்கு நவீன்குமார் குளிக்க சென்றுள்ளான். இதன்பின்னர் நவீன் வீடு திரும்பாமல் இருந்துள்ளான். 

இதனையடுத்து சிறுவனை ஆற்றில் தேடிய நிலையில், சிறுவனை காணாது தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், சிறுவனை உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளனர். 

பின்னர் அங்குள்ள சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சிறுவன் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த விஷயம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனைப்போன்று, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் சத்தியநாதபுரம் பகுதியை சர்ன்ஹாவார் சந்திரன். இவரது மகனின் பெயர் நிதின் பிரதாப் (வயது 19). இவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் இருக்கும் கல்லூரியில் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். 

இந்த நிலையில், இவரது நண்பர்களான வினோத், சுஜித், அருண்குமார் மற்றும் குமார் ஆகியோருடன் அங்குள்ள தாழையூத்து அருவி பகுதிக்கு குளிக்க சென்றுள்ளனர். இதில் நிதிநிர்க்கு நீச்சல் தெரியாத நிலையில், விளையாட்டு ஆர்வத்தில் விபரீதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Theni and Dindigul two different boys died in river and falls


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal