ஈரான் தாக்குதல் தொடரும் நிலையில் துருக்கி பதில்...! - ராஜதந்திர முயற்சிக்கு இப்போது சூழ்நிலை இல்லை...! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது ராணுவ நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இதற்கு பதிலாக, ஈரான் மத்திய கிழக்கு (மேற்கு ஆசியா) பகுதிகளில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போரின் பதற்ற நிலை மேலும் பரவிவருகிறது.

துருக்கி, அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு நட்பு நாடாக இருந்தாலும், தற்போதைய சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் விமர்சனத்தையும் தெரிவித்து வருகிறது. இதன் பின்னணியில், அமெரிக்கா-ஈரான் இடையிலான மோதலை நிறுத்த ராஜதந்திர முயற்சி எடுக்கப்படும் என்கிற கேள்வி துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் ஹகன் ஃபிடனிடம் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்து, ஹகன் ஃபிடன் தெரிவித்ததாவது, "தற்போது ராஜதந்திர நடவடிக்கைக்கு உகந்த சூழ்நிலை இல்லை. ஈரான் துரோகம் உணர்கிறது. அணுசக்தி திட்டத்தைப் பற்றிய இரண்டாவது பேச்சுவார்த்தை நடக்கும் நேரத்தில் அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

இருப்பினும், நாங்கள் எந்தவொரு விவேகமான மறைமுக முயற்சிக்கும் தயார் நிலையில் இருக்கிறோம். தூண்டப்படுவோம், ஆனால் துருக்கியின் மிக உயர்ந்த முன்னுரிமை போரிலிருந்து விலகுவதாகவே இருக்க வேண்டும்".

ஹகன் ஃபிடன் துருக்கி அமைச்சரவையில் மிக முக்கியமான நபராகவும், அதிபர் எர்டோகனுக்கு நம்பிக்கைக்குரிய நாயகராகவும் இருப்பவர். 2023-ஆம் ஆண்டு, புலனாய்வு துறை தலைவராக இருந்த இவர், வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

சமீபத்தில் ஈரான் துருக்கி நோக்கி மூன்று ஏவுகணைகளை வீசியது. இதை துருக்கி உள்ள நேட்டோ வான்பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக இடைமறித்து அழித்தது. இந்த சம்பவம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் பதற்ற நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Turkey Responds Iranian Attacks Continue Climate Not Ripe Diplomatic Efforts This Time


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->