ஓசூர் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி... மாடு முட்டி  பரிதாபமாக பலியான நபர்.!! - Seithipunal
Seithipunal


தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு விளையாட்டு பொங்கல் பண்டிகையின் போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருவது இயல்பான ஒன்றாகும். கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக ஜல்லிக்கட்டை தடை செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. 

தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு ஜல்லிக்கட்டு இன்று மக்களுக்காக, தமிழர்களுக்காக ஜல்லிக்கட்டுபோட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகிறது. இதற்க்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஏற்பாடுகள் பலமாக நடைபெற்று வந்தது. நேற்று காலை சுமார் 8 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி துவங்கி, மாலை 4.30 மணிவரை போட்டிகள் நடைபெற்றது. 

இந்த போட்டியில் சுமார் 55 மாடுபிடி வீரர்கள் காயமடைந்தனர், சுமார் 8 க்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதி செய்யப்பட்டனர். இன்று துவங்கி நடைபெற்று வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியிலும் தற்போது வரை சுமார் 10 வீரர்கள் காயமடைந்தனர். இவர்களில் இருவர் மதுரை மருத்துவமனையில் அனுமதியாகியுள்ளனர். 

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளும் ஜல்லிக்கட்டு போன்று மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் போன்றவை நடைபெற்று வரும் நிலையில், திருச்சி மாவட்டத்தில் உள்ள சூரியூர் பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டை காண வந்த ஜோதிமணி என்ற பெண்மணி மாடு முட்டி பரிதாபமாக பலியாகினர். இதனைப்போன்று ஓசூரில் நடைபெற்ற மஞ்சு விரட்டு நிகழ்ச்சியில் மாடுமுட்டி முருகன் என்பவர் பரிதாபமாக பலியாகியுள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in housur jalikat man died


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->