மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ள பாஜக; மம்தாவை எதிர்த்து முன்னாள் உதவியாளர் போட்டி...! - Seithipunal
Seithipunal


இந்தியாவிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட இரண்டாவது மாநிலமாகப் 294 தொகுதிகளைக் கொண்டுள்ள மேற்கு வங்கம் பார்க்கப்படுகிறது. இம்மாநிலத்தில், வரும் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 02 கட்டங்களாக சட்டமன்றதேர்தல் நடைபெறவுள்ளது.

இதையடுத்து அங்கு ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸும், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் பாஜகவும் கடுமையாக காலத்தில் இறங்கியுள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் 144 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது. இதில் சுவேந்து அதிகாரி மற்றும் திலீப் கோஷ் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்வர் மம்தா பானர்ஜியின் தொகுதியான பபானிபூர் மற்றும் நந்திகிராமில் சுவேந்து அதிகாரி நிறுத்தப்பட்டுள்ளார். இவர் கடந்த 2021 தேர்தலில், நந்திகிராமில் போட்டியிட்டு மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர்.

2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியான பபானிபூரிலும்  சுவேந்து அதிகாரியை பாஜக களமிறக்கியுள்ளது. பாஜகவுக்கு இணைவதற்கு முன்பு மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராக இருந்தவர் சுவேந்து அதிகாரி.

இவர்களைத் தவிர ராஷ்பெஹாரி தொகுதியில் முன்னாள் ராஜ்யசபா எம்பி ஸ்வபன் தாஸ்குப்தா நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக தலைவர் அக்னி மித்ரா பால் அசன்சோல் தெற்கில் நிறுத்தப்பட்டுள்ளார். மேலும் இந்தப் பட்டியலில் 10 பெண் வேட்பாளர்களும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP releases first list of candidates for 144 seats in West Bengal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->