பாலியல் புகாரில் சிக்கிய ஆர்.சி.பி. வீரர் இன்ஸ்டா பிரபலத்துடன் ரகசிய திருமணம்..!
RCB Player Entangled in Sexual Harassment Scandal Secretly Marries Instagram Influencer
ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஆர்.சி.பி. அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள், தனது காதலியை ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
யாஷ் தையல் மீது 17 வயது மைனர் உள்ளிட்ட இரண்டு பெண்கள் பாலியல் ரீதியாக புகார் அளித்துள்ள நிலையில், அவர் மீது இரண்டு பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, திருமண ஆசை காட்டி சுமார் 05 ஆண்டுகள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக காசியாபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் அளித்திருந்தார்.
அத்துடன், கிரிக்கெட்டில் உதவுவதாகக் கூறி கடந்த 2023-ஆம் ஆண்டில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெய்ப்பூரிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் யாஷ் தயாளுக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் பிரபலமான ஸ்வேதா பண்டிரை பிப்ரவரி 4, 2026 அன்று திருமணம் செய்துகொண்டதாக தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன. உத்தரப்பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருதரப்பினருக்கான உறவுகள் மட்டுமே கலந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்போது டெல்லியில் வசித்து வரும் ஸ்வேதா பண்டிர் உத்தரகாண்ட் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இன்ஸ்டாகிராமில் 5,87,000க்கும் மேற்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டுள்ளார். தனது திருமணம் குறித்து யாஷ் தயாள் எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ஸ்வேதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் இருவரையும் உள்ளடக்கிய ஒரு 'ரீல்ஸ்' வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
2025-ஆம் ஆண்டில் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கோப்பையை வென்ற RCB அணியில் இடம்பெற்றிருந்த தயாள், இந்த ஆண்டும் அத்தொடரில் மீண்டும் பங்கேற்கவுள்ளார்.
English Summary
RCB Player Entangled in Sexual Harassment Scandal Secretly Marries Instagram Influencer