கேரளா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முதல் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு; ராஜீவ் முதல் நவ்யா ஹரிதாஸ் வரை களமிறங்கியுள்ளனர்..!
First List of BJP Candidates Contesting Kerala Assembly Elections Released
தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, 140 சட்டசபை தொகுதிகளை கொண்டிருக்கும் கேரளாவில் வரும் ஏப்ரல் 09-ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் பாஜக போட்டியிடும் 47 இடங்களுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதன்மூலம், கேரளாவில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தும் நோக்கில், பல முக்கியத் தலைவர்களுக்கு பாஜக வாய்ப்பளித்துள்ளது.
அதில் முக்கிய வேட்பாளர்களில் ஒருவரான மாநிலக் கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜீவ் சந்திரசேகர், நேமம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடவுள்ளார். இந்தத் தொகுதியில் பாஜக மற்றும் சிபிஐஎம் இடையே நேரடிப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் வி. முரளீதரன் கஜக்கோட்டம் தொகுதியில் போட்டியிடுவுள்ளார். இத்தொகுதியில் சிபிஐஎம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவும், பாஜக தலைவர் கே.சுரேந்திரன் மஞ்சேஷ்வரிலும், ஷோபா சுரேந்திரன் பாலக்காடு தொகுதியிலும், வட்டியூர்காவு தொகுதியில் பாஜக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர். ஸ்ரீலேகாவும் போட்டியிடுகின்றனர்.
முன்னாள் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரனின் மகள் மற்றும் காங்கிரஸ் தலைவர் கே.முரளீதரனின் சகோதரியான பத்மஜா வேணுகோபால் திருச்சூர் தொகுதியில் பாஜகவால் நிறுத்தப்பட்டுள்ளார். இவர்களைத் தவிர, 2024 மக்களவைத் தேர்தலில் பிரியங்கா காந்தி வதேராவை எதிர்த்து வயநாட்டில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸும் கோழிக்கோடு வடக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
பாஜகவின் இந்த முதற்கட்ட வேட்பாளர்களின் பட்டியலால், கேரளத்தில் காங்கிரஸ் மற்றும் சிபிஐஎம் ஆகிய 03 கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவும் என்று கூறப்படுகிறது. அடுத்து வரவிருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலில் சிபிஐஎம் 86 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. அதில், 56 சிட்டிங் எம்எல்ஏக்களையும் மீண்டும் பரிந்துரைத்துள்ளது. முதலமைச்சர் பினராயி விஜயன் மீண்டும் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள தர்மடம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவுள்ளார்.
English Summary
First List of BJP Candidates Contesting Kerala Assembly Elections Released