சிசேரியன் செய்த பெண்ணின் வயிற்றில் பஞ்சு., பழைய துணி..! பரிதாபமாக உயிரிழந்த பெண்மணி.. கடலூரில் பேரதிர்ச்சி...!!
in cudallore pregnant girl died after delivery
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அருகேயுள்ள ஆலடி கலர்குப்பம் கிராமத்தை சார்ந்தவர் ராஜ்குமார் (வயது 27). இவரது மனைவியின் பெயர் பிரியா (வயது 24). இவர் இருவரும் கடந்த மே மாதம் 2018 ஆம் வருடத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில்., தற்போது பிரியா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில்., கடந்த 27 ஆம் தேதியன்று பிரியாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அங்குள்ள விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரியா அனுமதி செய்யப்பட்டார்.

பின்னர் இவரை சோதனை செய்த மருத்துவர்கள் இரவு 11.40 மணிக்கு அறுவை சிகிச்சையின் மூலமாக அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்த நிலையில்., கடந்த நன்கு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில்., இவரின் உடல்நிலை கடந்த 31 ஆம் தேதியன்று திடீரென மோசமடைவயே வயிறும் வீக்கமாக இருந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும்., பிரியாவின் வயிற்றில் பழைய துணிகள் மற்றும் பிஞ்சுகள் இருந்ததாகவும்., இதனால் பிரியாவின் வயிறு வீங்கி உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்துவிட்டார் என்றும்., மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாக உயிர் பலியாகியுள்ளது என்று கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இது குறித்த தகவல் காவல் துறையினர் மற்றும் மாவட்ட வட்டாட்சியருக்கு தெரியவந்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் வாக்குவாதம் நடைபெற்றது. இதனையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்குவதாக காவல் துறையினர் தெரிவித்ததன் பேரில் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
in cudallore pregnant girl died after delivery