'அறிவாலயத்தை ஆபாசக் கூடாரமாக்கிய ஆபாசநிதி...! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் கண்டனப் பதிவால் பரபரப்பு...! - Seithipunal
Seithipunal


தமிழக பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் சமூக வலைதள பதிவில், "அண்ணா உருவாக்கிய அறிவாலயத்தை ஆபாச அரசியலின் மேடையாக மாற்றியவர் ஆபாசநிதி" என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.தி.மு.க. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று தஞ்சையில் த.வெ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது அவர் முதலமைச்சர் மற்றும் பெண்கள் குறித்து பேசிய கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.அவரது பதிவில், "பேரறிஞர் அண்ணா தனது தமிழறிவாலும் அரசியல் நாகரிகத்தாலும் உருவாக்கிய இயக்கத்தின் கண்ணியத்தை, இன்று தரம் தாழ்ந்த சொற்களாலும் இரட்டை அர்த்தம் நிறைந்த பேச்சுகளாலும் சீரழிக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

அண்ணா கட்டியெழுப்பிய அறிவாலயத்தை ஆபாச அரசியலின் அடையாளமாக மாற்றியிருப்பது வேதனையளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.மேலும், "தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்புக்கு உரிய பொறுப்புணர்வும், அடிப்படை மனிதநேயமும், அரசியல் நாகரிகமும் இன்றி பொது மேடையில் பேசப்பட்ட வார்த்தைகள் கண்டனத்திற்குரியவை.

குறிப்பாக பெண்களைப் பற்றிய அவரது கருத்துகள், அவரின் சிந்தனை எத்தகையது என்பதை வெளிப்படுத்துகின்றன. இத்தகைய தரம் தாழ்ந்த பேச்சுகளை தமிழக தாய்மார்களும், சகோதரிகளும், பெற்றோர்களும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, "இதுபோன்ற ஆணவ மனப்பான்மையும், பெண்களை இழிவுபடுத்தும் அரசியல் அணுகுமுறையுமே கடந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்களிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. அதிலிருந்து பாடம் கற்காமல், மீண்டும் பொது மேடைகளில் இதேபோன்ற கருத்துகளை முன்வைப்பவர்கள் மீது தமிழக மக்களே தக்க அரசியல் தீர்ப்பை வழங்குவார்கள்.

குறிப்பாக பெண்களின் மரியாதையை இழிவுபடுத்தும் எந்தவொரு அரசியல் பேச்சுக்கும் தமிழக பெண்கள் இனியும் இடமளிக்க மாட்டார்கள்" என்றும் தெரிவித்துள்ளார்.இறுதியாக, "உதயநிதி ஸ்டாலின் பேசியதாக கூறப்படும் ஆபாச கருத்துகளுக்கு எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்" என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

udhaiyanidhi turned arivalaiyam into bad vibration Minister Adhav Arjuna condemn


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->