அரசியல் கட்சியாக அவதாரம் எடுக்கிறதா கரப்பான் பூச்சி ஜனதா கட்சி..? அபிஜித் திப்கே கூறியது என்ன..?
What did Abhijit Dipke say about the next move of the cockroach Janata Party
நீட் யுஜி வினாத்தாள் கசிவுக்கு எதிராக டேலி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அமைப்பினர் மற்றும் மாணவர்கள் ஒரு மாதமாக போராட்டம் நடத்தினர். அதன் விளைவாக மத்திய கல்வியமைச்சராக இருந்த தர்மேந்திரா பிரதான் பதிவு விலகியுள்ளார். அதன்பின்னராக புதிய மத்திய கல்வி அமைச்சராக பிரஹலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே நேற்று கூறியதாவது;
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் சிஜேபியின் முதல் மையக் குழு கூட்டம் ஆகஸ்ட் 05-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதில் பங்கேற்குமாறு நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதில் அவர்களுடைய அடுத்தகட்ட செயல்திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிஜேபிஅமைப்பை எவ்வாறு விரிவு படுத்துவது, மக்களின் நலனுக்காக அவர்கள் எடுக்க வேண்டிய பிரச்சினைகளைக் கண்டறிவது மற்றும் இயக்கத்துக்கான வரைபடத்தை உருவாக்குவது குறித்து விவாதிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சிஜேபி அமைப்பை அரசியல் கட்சியாக மாற்றும் எந்த எண்ணமும் அவர்களுக்கு இல்லை என்றும், இது ஒரு மக்கள் இயக்கமாகவே தொடர வேண்டும் என்று தங்கள் விரும்புவதாகவும் அறிவித்துள்ளார்.
மேலும், தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, சிஜேபி-ஐ அரசியல் கட்சியாக மாற்றுவதற்கான எந்தக் காரணமும் தனக்கு தெரியவில்லை என்றும் அபிஜித் திப்கே கூறியுள்ளார்.
English Summary
What did Abhijit Dipke say about the next move of the cockroach Janata Party