ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம்; சிறார், இளைஞர்களை குறிவைத்து சுட்டுக் கொல்லும் பாகிஸ்தான் ராணுவம்..? - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விலைவாசி உயர்வை கண்டித்து கடந்த ஏப்ரலில் முதல் மிகப் பெரிய போராட்டம் வெடித்துள்ளது. இந்த போராட்டத்தில் பொதுமக்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை நடத்தினர். 

இந்நிலையில், தற்போது ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 53 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 03 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஜூலை 27, ஆகஸ்ட் 02-ஆம் தேதிகளில் இரு கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன.

அடுத்ததாக மூன்றாம் கட்ட தேர்தல் வரும் 10-ஆம் தேதி மூன்றாம்  நடைபெற உள்ளது. மொத்தமுள்ள 53 தொகுதிகளில் 12 தொகுதிகள் காஷ்மீரில் இருந்து ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு இடம் பெயர்ந்த அகதிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதை எதிர்த்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இவ்வாறு போராட்டம் நடத்துபவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதல்களில் கடந்த 02 மாதங்களில் மட்டும் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாகிஸ்தான் கட்டுப்பாட்டு ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ராவல்கோட் பகுதியை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில்; 

போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்படுகிறது. 15, 16 வயதுடைய சிறார்களையும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் ஈவு, இரக்கமின்றி சுட்டுக் கொன்று வருகின்றதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அத்துடன், ராணுவ தாக்குதலில் உயிரிழப்போரில் பெரும்பாலானோர் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக உள்ளதாகவும், இளைஞர்களை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்படுகிறதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராணுவ வீரர்களின் துப்பாக்கிச்சூட்டில் படுகாயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், மருத்துவ உபகரணங்கள் தங்களிடம் இல்லை என்றும், ராணுவத்தின் கட்டுப்பாடுகளால் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறதாகவும்குறித்த மருத்துவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Pakistani army is targeting and killing children and youth in occupied Kashmir


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->