"ஆட்டோவில் சிறுவர்கள் கடத்தல்?" பக்கத்து வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்களை மீட்ட போலீசார்!
Kidnapping Rumor Causes Panic in Kundrathur Missing Boys Found Safely Watching TV
சென்னை குன்றத்தூர் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டதாகப் பரவிய தகவலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பெற்றோர் மத்தியில் கடும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.
கதறிய பெற்றோர் & காவல்துறை தேடுதல்:
விளையாடச் சென்ற சிறுவர்களை நீண்ட நேரமாகக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவர்கள் கடத்தப்பட்டதாக வந்த தகவலை அடுத்துக் கதறி அழுதபடி உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிசார் தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
வீட்டில் டிவி பார்த்த சிறுவர்கள்:
காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள வீடுகளில் நடத்திய தேடுதலின் போது, கடத்தப்பட்டதாகப் பரவிய இரு சிறுவர்களும் அங்குள்ள ஒரு பக்கத்து வீட்டில் சாதாரணமாகத் தொலைக்காட்சி (டிவி) பார்த்துக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, இரு சிறுவர்களையும் பத்திரமாக மீட்ட போலிசார், அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். வதந்தியால் ஏற்பட்ட பரபரப்பு சிறுவர்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது.
English Summary
Kidnapping Rumor Causes Panic in Kundrathur Missing Boys Found Safely Watching TV