பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தற்கொலை படை குண்டுத் தாக்குதல்; 12 பேர் உயிரிழப்பு; 18 பேர் படுகாயம்.!
12 people killed in a suicide bombing in northwestern Pakistan
பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் இன்று தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளதோடு, 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள காவல் துறை சோதனைச் சாவடி மீது, வெடிபொருள் நிரப்பப்பட்ட டிராக்டரை கொண்டு தீவிரவாதி மோதி, குண்டுகளை வெடிக்க செய்துள்ளார். இதற்கு தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத படை காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைபர் பக்துன்வா மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் எல்லைப் பகுதியில், கைபர் பக்துன்வாவின் தேரா இஸ்மாயில் கான் மாவட்டத்தில் உள்ள தாராஸிந்தா தாலுக்காவில் அமைந்துள்ள அமன் மேலா காவல் சோதனைச் சாவடியில் இந்த குண்டு தாக்குதல் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.

இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 02 பேர் பெண்கள், 02 பேர் சிறுவர்கள், 02 அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் காயமடைந்த 18 பேர் மாவட்ட தலைநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உடனடியாக தாக்குதல் நடந்த இடத்தில் வெடிகுண்டு செயலிழப்பு படைப் பிரிவினர் வெடித்த குண்டின் தன்மை குறித்து அறிய ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த 2022-இல் பாகிஸ்தான் மற்றும் தெஹ்ரீக்-இ-தலிபான் தீவிரவாத படையினர் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது. அதன் பிறகு கைபர் பக்துன்வாவில் தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
English Summary
12 people killed in a suicide bombing in northwestern Pakistan