காலை சிற்றுண்டி திட்டம் - போர்க்கொடி தூக்கும் ஆசிரியர்கள்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசின் ஆரம்பப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என்று, தமிழக அரசுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும், அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதேநேரத்தில், அந்த திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என பல இடங்களில் சுற்றறிக்கையாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள் எண்ணும் எழுத்தும், இ.எம்.ஐ.எஸ்., பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன.

இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.

இந்நிலையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக் கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Govt School Breakfast scheme issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->