வரலாறு காணாத உச்சம்: சென்னையில் தங்கம் விலை சவரன் ரூ.1 லட்சத்தைத் தாண்டியது! - Seithipunal
Seithipunal


சென்னையில் தங்கம் விலை இன்று (திங்கட்கிழமை) விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து, வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் ரூ. 1 லட்சத்தைத் தாண்டி விற்பனையாகிறது. இந்தத் திடீர் விலையேற்றம் நடுத்தர மக்களையும், பெண்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஒரே நாளில் ரூ. 1,160 உயர்வு:
வாரத்தின் முதல் நாளான இன்று காலையிலேயே தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்ந்திருந்தது. மாலையில் மேலும் ரூ. 440 உயர்ந்ததன் மூலம், இன்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு மொத்தம் ரூ. 1,160 அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலவரம் (சென்னை):
ஒரு சவரன் (8 கிராம்): ரூ. 1,00,120

ஒரு கிராம்: ரூ. 12,515

வெள்ளியும் சளைக்கவில்லை:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் எகிறியுள்ளது. காலையில் கிராமுக்கு ரூ. 3 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் ரூ. 2 உயர்ந்து, தற்போது ஒரு கிராம் வெள்ளி ரூ. 215-க்கு விற்பனையாகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Price chennai 1 laks


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->