செய்கூலி சேதாரம் இல்லா தங்க நகைகள் - சதுரங்க வேட்டையில் சிக்கிய திருவொற்றியூர் மக்கள்!
gold money theft chennai
திருவொற்றியூரில் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி பல கோடி ரூபாயை ஏமாற்றிய புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவொற்றியூர் அஜாக்ஸ் பகுதியில், குறைந்த பணத்திற்கு தங்கம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை வெளியிட்டது பிரபாகரன் என்பவரின் ஒரு நிறுவனம் தான்.

செய்கூலி இல்லை சேதாரம் இல்லை., குறைந்த பணத்தில்தங்க நகைகள் வாங்க வாருங்கள் என்ற கவர்ச்சியான அறிவிப்பை நம்பி பெண்கள் உள்ளிட்ட 5000 க்கும் மேற்பட்டவர்கள் பணம் செலுத்தியுள்ளனர்.
தங்கத்தை தராமல் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட பெண்கள், திருவொற்றியூர் காவல் புகார் கொடுத்தனர். மேலும் நரேஷ் குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் அந்த நிறுவனத்தின் உரிமையாளரான பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே பணத்தை இழந்த பெண்கள் காவலனியம் வரவே அவர்களை போலீசார் விரட்டி அனுப்பியதாக சொல்லப்படுகிறது.