அட்வான்ஸை கொடுக்காத ரவி மோகன்: ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!
Court orders actor Ravi Mohan to submit property documents worth Rs 5 crore
ப்ரோ கோட் என்ற புதிய படத்தில் நடிக்க நடிகர் ரவி மோகன், வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், அவர், 05.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ப்ரோ கோட் என்ற படத்தில் நடிப்பதற்காக, பட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் நடிகர் ரவி மோகனுக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், 80 நாட்கள் கால்ஷீட் கொடுத்தும் படத்தை அந்த நிறுவனம் தொடங்கவில்லை. இருந்தும் கொடுத்த அட்வான்ஸை திருப்பிக் கேட்டுள்ளது.

இந்நிலையில், பட தயாரிப்பு நிறுவனம் 09 கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என்று கேட்டு நடிகர் ரவி மோகன், சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தார். அத்துடன், தயாரிப்பு நிறுவனமான பாபி டச் கோல்டு யுனிவர்சல் சார்பில், நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த பிரச்சினையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது என்றும், இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன், நடிகர் ரவி மோகன், ரூ.5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை 04 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இரு தரப்பிற்கு இடையேயான பிரச்னையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
English Summary
Court orders actor Ravi Mohan to submit property documents worth Rs 5 crore