ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படம்!
h vinoth dhanush make new movie
நடிகர் தனுஷ், இயக்குநர் ஹெச். வினோத் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவலை இசையமைப்பாளர் சாம் சிஎஸ் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் அடுத்த ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தனுஷ், ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது கடந்த சில வாரங்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
அதற்கு முந்தையதாக, தனுஷ் நடித்த ‘தேரே இஷ்க் மெயின்’ என்ற ஹிந்திப் படம் சமீபத்தில் முடிவடைந்தது. அதேபோல், அவர் இயக்கியுள்ள ‘இட்லி கடை’ என்ற படம் அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்துக்குப் பிறகு, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் பெரிய தயாரிப்பில் நடிக்க உள்ளார் தனுஷ். இதற்கிடையில், ஹெச். வினோத் இயக்கும் புதிய படம் அவரது அடுத்த முக்கிய முயற்சியாக அமைவுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
h vinoth dhanush make new movie