மிக மோசமான தோல்வியை பார்க்க போறீங்க ஸ்டாலின்! திமுக கூட்டணி கட்சி உடையப்போகுது! ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தனது ஆன்மீக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இன்று காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அண்ணாமலை காமாட்சியம்பாளை மனமுருகி தரிசித்தார். இதையடுத்து, கோவில் நிர்வாகம் அவருக்கு பிரசாதம் மற்றும் நினைவுப்பொருட்களை வழங்கி மரியாதை செலுத்தியது. கோவிலில் இருந்த பக்தர்கள் பலரும் அவரை சூழ்ந்து கொண்டு செல்பி எடுத்துக்கொள்வதில் ஆர்வம் காட்டினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கர் சமீபத்தில் உடல்நிலை காரணமாக ராஜினாமா செய்ததை நினைவுகூர்ந்தார். அவர் மீண்டும் உடல்நலம் கொண்டு குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்றும் கூறினார்.

மேலும் சென்னையில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் பெண் நிர்வாகியுடன் தொடர்புடைய தாக்குதல் சம்பவம் குறித்து பேசினார். விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெண்கள், ஆண்கள் எனப் பார்க்காமல் நியாயம் கிடைக்க வேண்டும் என்றார்.

அத்துடன், திமுக ஆட்சியையும் கடுமையாக விமர்சித்த அண்ணாமலை, “தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவை அகற்ற வேண்டும் என்ற உறுதி பாஜகவினரிடையே உறுதியாக உள்ளது. திமுக நாளுக்கு நாள் மதிப்பிழந்துக் கொண்டே செல்கிறது. கூட்டணி உடைபோடும் நிலை உருவாகி வருகிறது. 2026 தேர்தலில் திமுகவுக்கு மிக மோசமான தோல்வி ஏற்படும்” என்றார்.

பெண்கள் பாதுகாப்பும், நாட்டின் வளர்ச்சியும் திமுக ஆட்சியில் கவனிக்கப்படவில்லையென குற்றம் சாட்டிய அண்ணாமலை, தமிழக மக்களுக்கு புதிய மாற்றத்திற்கான தேவை அதிகரித்து வருவதாகவும், பாஜக அதற்கான தயாரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

இவ்வாறு, ஆன்மீக சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வரும் அண்ணாமலை, அரசியல் விமர்சனங்களையும் தொடக்கி இருப்பது, எதிர்கால தேர்தல் சூழ்நிலையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Stalin you are about to witness the worst defeat The DMK coalition party is about to fall apart Annamalai will make the ruling party scream


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->