டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி.. சென்னையில் தீவிர சிகிச்சை!
DSP Sundaresan has chest pain undergoing intensive treatment in Chennai
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறியதால் அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட, அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரேசன், தனது வாகனத்தை அதிகாரிகள் பறித்துக்கொண்டதாக கூறி பணிக்கு நடந்து வந்த 'வீடியோ' வைரலானது.
இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரேசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது , கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஐ.ஜி. செந்தில்வேலன் ஆகியோருக்கு எதிராக காழ்ப்புணர்ச்சி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.அதனை தொடர்ந்து, தஞ்சை மண்டல டி.ஐ.ஜி. விசாரணை அறிக்கையின் அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.இந்த விவகாரம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி. சுந்தரேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருன்றனர்.
English Summary
DSP Sundaresan has chest pain undergoing intensive treatment in Chennai