விரைவில்! குணமடைந்தவுடன் உங்களை சந்திக்க உங்கள் ஊரில் நான்...! - முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
I will be in your town to meet you as soon as I recover Chief Minister MK Stalin
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்றபடியே அரசுஅலுவலகப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இதில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.
அதுமட்டுமின்றி,அரசு தலைமைச் செயலாளர் முருகானந்தமிடம் பல்வேறு துறை சார்ந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், பல்வேறு கோப்புகளை பார்வையிட்டு ஒப்புதல் அளித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டதாவது,"மருத்துவமனையில் இருந்தபடியே 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டறிந்ததோடு; அரசுக் கோப்புகளிலும் கையெழுத்திட்டேன்.
மருத்துவர்கள் அறிவுறுத்திய ஓய்வுக்குப் பிறகு, விரைவில் உங்களைச் சந்திக்க உங்கள் மாவட்டங்களுக்கு வருவேன்! "என்று பதிவிட்டுள்ளார். இது தற்போது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக மக்களிடையே இருந்து வருகிறது.
English Summary
I will be in your town to meet you as soon as I recover Chief Minister MK Stalin