இதான் கடைசி நாள்! கண்ணீருடன் பாக்கியலட்சுமி தொடர் நடிகை!
Baklakshmi serial actress last day shooting
பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாளில் நடிகை சுசித்ரா, ரசிகர்களுடன் நேரலையில் உருக்கமாபேசியுள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு தொடங்கிய இந்தத் தொடர், இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதில் நடிகை சுசித்ரா, பாக்கியலட்சுமியாக தனது இயல்பான நடிப்பால் முக்கிய பங்கு வகித்தார்.
இந்த தொடர் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், இறுதி காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, சுசித்ரா, இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் பேசினார்.
அப்போது, "பாக்கியலட்சுமி முடிவடைகிறது என்பதனை நீங்கள் அறிவீர்கள். இந்த வெற்றிக்கு நீங்கள் அளித்த ஆதரவே முக்கியம். உங்கள் அன்புக்கும் ஊக்கத்திற்கும் நன்றி. இந்தத் தொடரை நம்பி ஒளிபரப்பிய சேனல் நிர்வாகத்துக்கும் என் நன்றிகள்.
நான் அடுத்ததாக நடிக்க உள்ள தொடர்களுக்கும் இதேபோல் உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன். கொடுப்பீர்கள் என நம்புகிறேன். கடந்த 5 ஆண்டுகளாக பாக்கியா என்ற பாத்திரத்தில் வாழ்ந்தேன். இது என்னை உணர்ச்சிவசப்படச் செய்கிறது. கடைசி எபிசோடு எப்போது ஒளிபரப்பாகும் எனத் தெரியவில்லை,” என கண்கலங்கிய சுசித்ரா பேசி உள்ளார்.
English Summary
Baklakshmi serial actress last day shooting