யுனெஸ்கோ அமைப்பில் இருந்து மீண்டும் வெளியேறிய அமெரிக்கா..!
The United States has withdrawn from UNESCO again
யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியதாவது:
யுனெஸ்கோ அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பது, நாட்டின் தேசிய நலன்களுக்கு உகந்ததாக இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்த அமைப்பு பிளவுபடுத்தும் சமூக மற்றும் கலாசார காரணங்களை பின்பற்றுகிறது என்றும் குற்றம் சுமத்தியுள்ளார்.

மேலும், பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அனுமதிப்பது என்ற யுனெஸ்கோவின் முடிவு சிக்கலானது என்றும், அது அமெரிக்காவின் கொள்கைக்கு முரணானது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த அமைப்புக்குள் இஸ்ரேல் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றுகிறது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னர், டிரம்ப் முதல் முறையாக அமெரிக்க அதிபராக இருந்த போது 2017-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பில் இருந்து அமேரிக்கா வெளியேறியது. பின்னர் ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பிறகு மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்டது. தற்போது மீண்டும் வெளியேறியுள்ளது.
English Summary
The United States has withdrawn from UNESCO again