​கமல்ஹாசனிடம் காதலைச் சொல்ல சென்றேன்…"ஆனால் அவர் என்னை..."– நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் பேச்சால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் கதாநாயகியின் தாயாக அறிமுகமாகி, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மக்கள் மனங்களில் தனி இடத்தை பிடித்துள்ள நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை சமீபத்தில் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, நடிகர் கமல்ஹாசனை கடைசியாக பார்த்தபோது நடந்தது பற்றி அவர் கூறிய தகவல், ரசிகர்களிடையே ஆச்சரியம் ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன், கரு பழனியப்பன் இயக்கிய ‘பிரிவோம் சந்திப்போம்’ திரைப்படத்தில் சினேகாவின் தாயாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், ‘நாடோடிகள்’, ‘யுத்தம் செய்’, ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட திரைப்படங்களில் பல முக்கியமான தாய்மார் வேடங்களில் நடித்துள்ளார். நடிகையாவதோடு மட்டும் இல்லை, 2012-ம் ஆண்டு ‘ஆரோகணம்’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் தமிழ்த் திரையுலகில் தன்னை நிலைநாட்டினார்.

இதைத் தொடர்ந்து ‘அம்மணி’, ‘நெருங்கி வா முத்தமிடாதே’, ‘ஹவுஸ் ஓனர்’, ‘ஆர் யூ ஓகே பேபி’ உள்ளிட்ட சமூக நோக்குடைய படங்களையும் இயக்கியுள்ளார். இவர் தொகுத்து வழங்கிய ஜீ தமிழின் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி, பல்வேறு குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைந்தது. குறிப்பாக, “என்னம்மா இப்படி பண்றீங்களே மா…” என்கிற வசனம், இணையத்தில் மிகப்பெரிய மீம் டெம்ப்ளேட்டாகி இன்று வரை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது, லட்சுமி ராமகிருஷ்ணன், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தனது சமையல் திறமையால் பாராட்டு பெற்றுவருகிறார். இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், கல்லூரி நாட்களில் ஏற்பட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை அவர் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, “நான் கல்லூரியில் இருக்கும்போது கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகையாக இருந்தேன். அவரிடம் என் காதலை வெளிப்படுத்த வேண்டும் என்ற ஆசையுடன் அவரை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை பார்த்தவுடனே, ‘என்னடி தங்கச்சி, எப்படி இருக்க?’ என்று கேட்டார். அவர் கூறிய அந்த ‘தங்கச்சி’ எனும் வார்த்தையை கேட்டவுடன், என் மனதிலிருந்த காதல் உணர்வுகள் அனைத்தும் ஒரே முறை முறிந்து விழுந்தது போல உணர்ந்தேன். அதனால், என் காதலை சொல்லவே முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற மற்ற போட்டியாளர்களும், ரசிகர்களும் சிரிப்புடன் அவரை பாராட்டினர். தற்போது 60 வயதைக் கடந்தும், லட்சுமி ராமகிருஷ்ணன் இன்னும் ஆர்வத்துடன் தொலைக்காட்சித் தளத்தில் தன்னைச் செலவழித்து வருவது பாராட்டத்தக்கது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I went to confess my love to Kamal Haasan But he rejected me Actress Lakshmi Ramakrishnan speech creates a stir


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->