"என்கிட்டே 2 டிகிரி இருக்கு"...சினிமாவை விட்டு அனுப்பினாலும் வேறு வேலை செய்து பிழைத்து கொள்வேன் - சிவகார்த்திகேயன்!
Even if Im sent away from cinema do other work to survive Sivakarthikeyan
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற தமிழக அரசின் கல்வி விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரையாற்றினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:“திரைப்பட விழாவில் எதையாவது பேசி விட்டு போய்விடலாம். ஆனால் கல்வி விழாவில் அப்படி பேச முடியாது.உலகில் எதுவெல்லாம் பெரிய செல்வம் என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் விட பெரிய செல்வம் கல்விதான்.
என் அப்பா ஒரு வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்றதால், நான் மூன்று வேளை சாப்பிட்டு பள்ளிக்குச் சென்றேன்.
அவர் நடந்து பள்ளிக்குச் சென்றதால், நான் ஆட்டோ, ரிக்ஷா, பஸ், ரெயில் என வசதியுடன் பள்ளிக்குச் சென்றேன்.
ஒரு தலைமுறை படித்தால் அடுத்த தலைமுறையின் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை என் குடும்பத்தின் அனுபவத்தில் இருந்து கண்டுள்ளேன்.
என் அப்பாவுக்கு இருந்த சூழ்நிலை காரணமாக அவர் விரும்பிய படிப்பை படிக்க முடியவில்லை.ஆனால் அவர் ஒரு டிகிரி பெற்றார்.அவருடைய மகனான என்னை பி.இ., எம்.பி.ஏ. என இரண்டு டிகிரிகள் படிக்க வைத்தார்.
என் அக்கா எம்.பி.பி.எஸ்., எம்.டி., எப்.ஆர்.சி.பி. என மூன்று டிகிரிகள் முடித்தார்.
சினிமா துறை மிகவும் சவாலானது.அங்கு சவால்கள் வரும் போதெல்லாம், எனக்கு தைரியம் தருவது என்னிடம் இரண்டு டிகிரிகள் இருக்கிறது என்பதே.எனக்குக் கல்வி உள்ளது என்பதால் எங்காவது வேலை செய்து வாழ முடியும் என்ற நம்பிக்கை கிடைத்தது.நான் நன்றாகப் படித்தேன். ஆனால் சினிமாவைப் பற்றிய ஆர்வத்தால் இந்தத் துறைக்கு வந்தேன்.”
மேலும்,“தற்போது அரசின் திட்டங்களால் பயன் பெறும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துகள்.
இத்தனை பேரின் வாழ்க்கையை மாற்றும் அரசுக்கும், முதலமைச்சருக்கும் நன்றி.வாழ்க்கையில் வெற்றி பெற, கைநிறைய சம்பாதிக்க, வீடு, கார் வாங்க, எல்லோரிடமும் கவுரவமாக வாழ, ஒரே தீர்வு நன்றாகப் படிப்பதுதான்.மதிப்பெண்ணுக்காக கொஞ்சம் படியுங்கள்.வாழ்க்கைக்காக நிறைய படியுங்கள்.
தமிழக அரசின் இதுபோன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் பல சாதனையாளர்களை உருவாக்கும்” எனப் தெரிவித்தார்.
English Summary
Even if Im sent away from cinema do other work to survive Sivakarthikeyan