ரகசிய தகவலால் தொடங்கிய சோதனை…! துப்பாக்கிச் சண்டையில் உயிர்த் தியாகம் செய்த காவலர்...! - Seithipunal
Seithipunal


ஜம்மு–காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாதத்தை வேரறுக்கும் நோக்கில் பாதுகாப்புப் படையினரும் காவல் துறையும் இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காஷ்மீர் உதம்ப்பூர் மாவட்டம் சோஹன் கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படைகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலைத் தொடர்ந்து, நேற்று இரவு காஷ்மீர் காவல் துறையினரும் மத்திய பாதுகாப்புப் படையினரும் அந்தப் பகுதியில் சுற்றிவளைத்து விரிவான சோதனையை தொடங்கினர்.

இந்த சோதனையின் போது, வனப்பகுதியில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அம்ஜத் பதான் என்ற காவல் துறை வீரர் வீர மரணமடைந்தார்.

அவரது உயிர்த்தியாகம் சக வீரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடும் துப்பாக்கி மோதல் நீடித்து வருகிறது.

அந்தப் பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டு, பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

raid started secret tip policeman sacrificed life gunfight


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->