சுப்மன் கில்லுக்கு முழு தொடர் வாய்ப்பு தர வேண்டும் அதுலயும் சொதப்புனா கில்லை கழற்றி விடனும்.. அஸ்வின் ஓப்பன்டாக் - Seithipunal
Seithipunal


தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3 போட்டிகள் முடிவில் 2–1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் தொடர்ந்து தடுமாறி வருவது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. 2023ல் டி20 அணியில் அறிமுகமான கில், தொடர்ந்து பெரிய ரன்கள் குவிக்க தவறியதால் ஒரு கட்டத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு அபிஷேக் சர்மா – சஞ்சு சாம்சன் ஓப்பனிங் ஜோடி சிறப்பாக செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், சுப்மன் கில்லை எதிர்கால ஆல்-ஃபார்மட் கேப்டனாக உருவாக்கும் நோக்கில் தேர்வுக்குழு மீண்டும் அவரை டி20 அணியின் துணை கேப்டனாக நியமித்து ஓப்பனிங் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் கடந்த 18 இன்னிங்ஸ்களில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் தடுமாறி வருகிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசிய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், துணை கேப்டன் என்ற முறையில் கில்லுக்கு முழு தொடரிலும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார். துணை கேப்டனை தொடரின் நடுவே நீக்குவது சரியான விஷயமல்ல என்றும், அதனால் தேர்வுக்குழு ஐந்து போட்டிகளிலும் அவருக்கு நியாயமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறினார். அதே நேரத்தில், அந்த வாய்ப்புகளிலும் கில் பெரிய ரன்கள் எடுக்கத் தவறினால், அணியின் நலனுக்காக கடினமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

2026 டி20 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு இப்போதே சிறந்த பிளேயிங் லெவனை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது என்றும், கில் தனது இடத்தை காப்பாற்றிக் கொள்ள குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் பாதுகாப்பாக விளையாடக் கூடாது என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shubman Gill should be given a full series opportunity and if he fails he will be removed Ashwin open talk


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->