பத்ரிநாத் பிறகுதான் என் நடனப் பயணம் மாறியது” -தமன்னாவின் அதிரடி வெளிப்பாடு
My dance journey changed only after Badrinath Tamannaahs dramatic revelation
தென்னிந்திய திரையுலகைத் தாண்டி, ஹிந்தி திரையுலகையும் தனது கவர்ச்சி நடிப்பாலும், ஆட்டத்தாலும் வெற்றிகரமாக கைப்பற்றியிருக்கிறார் நடிகை 'தமன்னா'.
அதிலும் குறிப்பாக, ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தின் ‘காவாலா…’ பாடலும், ஹிந்தியில் ‘ஸ்திரி-2’ படத்தின் ‘ஆஜ் கி ராத்…’ பாடலிலும் அவர் ஆடிய நடனம் ரசிகர்களை "அப்பப்பா…!" என்று வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், தனது நடனப் பயணம் குறித்து, அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் தமன்னா பகிர்ந்த கருத்துகள் வைரலாகியுள்ளன.அப்போது அவர் தெரிவித்ததாவது,"நான் பல மொழிப் படங்களில் நடித்து வந்தாலும், சவாலான நடன அசைவுகளை முயற்சிக்கத் தூண்டியது அல்லு அர்ஜுன்தான்.
அவருடன் இணைந்து நடித்த ‘பத்ரிநாத்’ படம் என் வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு, நிறைய படங்களில் நடனமாடும் வாய்ப்புகள் குவிந்தன.
குறிப்பாக, படங்களில் சிறப்பு பாடல்கள் மற்றும் வளைந்தும் நெளிந்தும் ஆடும் அசைவுகள் என்னை அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது" எனப் பெருமையாக தெரிவித்தார்.
English Summary
My dance journey changed only after Badrinath Tamannaahs dramatic revelation