தமிழகத்தில் நாளை முதல் மார்ச் 05 வரை மழைக்கு வாய்ப்பு; எந்த எந்த மாவட்டங்களில் மழை பெய்யும்..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் நாளை (பிப்ரவரி 28) முதல் மார்ச் 05-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை முதல் மார்ச் 05 அவரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும் என்றும், தமிழக கடலோர பகுதிகளில் நாளை ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

அத்துடன், தமிழகத்தில் இன்று காலை 08.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆயிக்குடியில் 07 செமீ, குண்டாறு செங்கோட்டை, ராமநதி அணைப் பகுதி, கோவை மாவட்டம் உபாசி, வால்பாறையில் தலா 04 செமீ, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம், மாம்பழத்துறையாறு, பாலமோர், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரில் தலா 03 செமீ, மழை பதிவாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chance of rain in Tamil Nadu from tomorrow to March 05


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->