வதந்திகளால் வேதனை அடைகிறேன்...! -அதிமுக வலுப்பெற வேண்டும் எனும் செங்கோட்டையன் விளக்க உரை
upcoming new moon day special day remove evil eye If you witch you roasted afterwards
அதிமுகவில் இருந்து விலகிச் சென்ற தலைவர்கள் மற்றும் தொண்டர்களை மீண்டும் கட்சிக்குள் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாகக் கேட்கின்ற அளவுக்கு நடவடிக்கை எடுத்தார்.

இதனால், கட்சியிலிருந்த அவரது முக்கிய பொறுப்புகள் அனைத்தும் அதிரடியாக நீக்கப்பட்டன.இதனைத் தொடர்ந்து, செங்கோட்டையன் தனது அடுத்த கட்ட அரசியல் பாய்ச்சல் குறித்து, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள இல்லத்தில் நெருங்கிய ஆதரவாளர்கள், முன்னாள் மாவட்டச் செயலாளர்கள், மேலும் ஓ.பன்னீர்செல்வத்தின் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு மற்றும் டி.டி.வி தினகரனின் அமமுக சார்ந்தோருடனும் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டார் என்ற செய்தி பரவியது.
இந்த சூழலில், தினகரனை அவர் சந்தித்ததாக வதந்தி பரவியிருந்தது. ஆனால் அதனை செங்கோட்டையன் மறுத்து, “அது திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி” என விளக்கம் அளித்தார். அதன்பின், பன்னீர்செல்வத்துடன் அவர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன.
ஆனால் இதையும் அவர் வெளிப்படையாக மறுத்தார்.ஈரோட்டில் பத்திரிக்கையாளார்களைச் சந்தித்த செங்கோட்டையன், “நான் சென்னையில் யாரையும் அரசியல் ரீதியாக சந்திக்கவில்லை. ஏற்கனவே விளக்கம் அளித்துவிட்டேன். சிலர் எனது நற்பெயரைக் களங்கப்படுத்தும் நோக்கில் வதந்தி பரப்புகின்றனர்.
இது எனக்கு வேதனையைக் கொடுக்கிறது” என்று தெரிவித்தார்.மேலும், அவர் வலியுறுத்தியதாவது,"எனது ஒரே நோக்கம், இயக்கம் வலுப்பெற வேண்டும்.அம்மாவின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.கோடிக்கணக்கான தொண்டர்களின் கனவு நனவாக வேண்டும்.அதிமுக ஒன்று திரண்டால்தான் ஆட்சி சாத்தியம்”என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.
English Summary
upcoming new moon day special day remove evil eye If you witch you roasted afterwards