வெளியானது இட்லி கடை படத்தின் முழு ஆல்பம்.!!
idli kadai movie full album released
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் நான்காவது படமாக ‘இட்லி கடை’ என்றத் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மேலும் டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்தப் படத்திற்கு ‘யு’ தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாக உள்ளது.

படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், இட்லி கடை திரைப்படத்தின் முழு ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது.
English Summary
idli kadai movie full album released