கடைசிவரை நிறைவேறாத ரோபோ ஷங்கரின் ஆசை!நிறைவேற்ற கமல்ஹாசன் எடுத்த அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


மறைந்த நகைச்சுவை நடிகர் ரோபோ ஷங்கரின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் உலக நாயகன் கமல்ஹாசன் எடுத்துள்ள அதிரடி முடிவு குறித்து, கோலிவுட் வட்டாரத்தில் பெரிய பரபரப்பு கிளம்பியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கலக்க போவது யார்’ நிகழ்ச்சிக்கு முன்னரே, ரோபோ ஷங்கர் பல படங்களில் நடித்திருந்தாலும்… ரசிகர்கள் மத்தியில் பெரிதாக அறியப்படாதவராகவே இருந்தார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின், அவரின் திறமைகள் வெளிச்சத்துக்கு வந்து, சினிமா வாய்ப்புகள் மழைபோல் குவிந்தன.

மேடைகளில் மக்களை சிரிக்க வைத்த அவர், பிறகு வெள்ளித்திரையிலும் தனக்கென இடம் பிடித்தார். ஆரம்பத்தில் உள்ளூர் மேடைகளில் மட்டுமே கலந்துகொண்டிருந்த அவர், புகழ் உயர்ந்த பின், வெளிநாடுகளிலும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானார்.

ரோபோ ஷங்கர்… கமல்ஹாசனின் தீவிர ரசிகராக இருந்தும், அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்ற ஆசை வாழ்நாளில் நிறைவேறவில்லை. அதே நேரத்தில், விஜய், அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

ரோபோவின் ஒரே மகள் இந்திரஜா ஷங்கர், விஜய்யின் ‘பிகில்’, கார்த்தியின் ‘விருமன்’ போன்ற படங்களில் நடித்தவர். சமீபத்தில் தனது காதலர் கார்த்திக்குடன் திருமணம் செய்து, தாயாகியுள்ளார். ரோபோ ஷங்கர், தனது பேரனை “நட்சத்திரம்” என பெயரிட்டதோடு, அவனை தலையில் தூக்கி மகிழ்ந்தார்.

ஆனால் யாரும் எதிர்பாராத நேரத்தில், கடந்த வாரம் ரோபோ ஷங்கர் திடீரென உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவரின் நண்பர்கள் பலர், ரோபோவின் கடைசி ஆசை… “கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் நடித்தே ஆக வேண்டும்” என்பதுதான் என பகிர்ந்தனர். அந்த கனவு நிறைவேறாமல் போனது.

இந்நிலையில், ரோபோவின் கடைசி ஆசையை நிறைவேற்ற… கமல்ஹாசன் தனது அடுத்த படத்தில், ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் வழங்க முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த செய்தி வெளிவந்ததுமே, ரசிகர்கள் அனைவரும் மனம் நெகிழ்ந்து, கமல்ஹாசனின் இந்த மனம்வைத்த தீர்மானத்தை பாராட்டி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Robot Shankar wish that never came true Kamal Haasan takes a bold decision to fulfill it


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->