விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது - தனியார் பள்ளி இயக்குனரகம் அறிவிப்பு.!!
special classes no held in exam holidays
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில் இந்தத் தேர்வுகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து நாளை முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 5-ந்தேதி வரை மொத்தம் 9 நாட்கள் காலாண்டு விடுமுறை அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்த காலாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

"விடுமுறைக் காலத்தில் மாணவர்களுக்கு சுமை ஏற்படுத்தும் விதமாக சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது. மேலும் விதிமுறைகளை மீறிச் செயல்படும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
English Summary
special classes no held in exam holidays