மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வெடிகுண்டு மிரட்டல்.!!
bomb thread to madurai high court
மதுரை உயர்நீதிமன்ற கிளையில், தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள 14 மாவட்டகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள், பல்வேறு மாவட்ட வழக்கறிஞர்கள் மதுரை உயர்நீதிமன்றத்திற்கு வந்து செல்வதுண்டு. இதனால், உயர்நீதிமன்ற வளாகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும்.
இந்த நிலையில், இன்று காலை உயர்நீதிமன்ற பணிகள் வழக்கம் போல் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தபோது உயர்நீதிமன்ற மின்னஞ்சலில் ஒரு மெயில் வந்திருந்தது. அதில் மதுரை உயர்நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்ததது.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உயர்நீதிமன்ற கிளை அலுவலர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும், உயர்நீதிமன்றத்திற்கு வந்திருந்த நீதிபதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள், ஊழியர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.
இதற்கிடையே, வளாகத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் மோப்ப நாய் உதவியுடன் உயர்நீதிமன்ற வளாகம், நீதிபதி குடியிருப்பு, நீதிமன்ற அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. வெடிகுண்டு புரளியால் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு விசாரணை சற்று தாமதமாக தொடங்கியது.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் குறித்து மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
bomb thread to madurai high court